ஜனவரி 30 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்புஜனவரி 30 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். அதில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரேஷன் கடைகள் ஜனவரி 30ஆம் தேதி இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 30 அன்று பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதற்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கெனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 30 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும் என அரசு தெரிவித்திருப்பது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments