அதிகரிக்கும் கொரோனா பரவல்... கர்நாடக மாநிலத்தில் வார இறுதியில் முழு ஊரடங்கு அமல்






இன்று ஒரேநாளில் பெங்களூருவில் இரவு பத்து மணி நிலவரப்படி 3048 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 147 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டுள்ள கர்நாடக அரசு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், அரசு நியமித்த வல்லுநர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் பெங்களூருவில் இரவு பத்து மணி நிலவரப்படி 3048 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 147 நபர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நகரில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் இயங்கும்.

இதர வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்களில் ( ஹோட்டல், தியேட்டர், பப், என அனைத்து இடங்களிலும்) 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மண்டபங்களில் 100 நபர்கள், திறந்த வெளி திருமண நிகழ்ச்சிகளில் 200 நபர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, கேரளா, கோவா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக வைரஸ் பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments