ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி கோபாலப்பட்டிணம், மீமிசலில் வெறிச்சோடிய சாலைகள்







ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  எதிரொலியாக கோபாலப்பட்டிணம், மீமிசலில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதுதொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்றும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அருகே உள்ள கடற்கரை நகரமான  கோபாலப்பட்டிணம் , மீமிசலில் இன்று 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக  கோபாலப்பட்டிணம்  முக்கிய சாலைகள், மீமிசல் முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அறிவித்து இருந்த அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருந்தது. ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.























எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments