2022 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோபாலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை.? தெரிந்து கொள்வோம்!!
தமிழகத்தில் 2022 இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால்  05-ஆம் தேதி ஜனவரி  மாதம் வெளியிடப்பட்டது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம்  (ஜனவரி 05) வெளியிட்டது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்று வாங்க பார்ப்போம்...

வார்டு வாரியாக விபரம்:

பாகம் எண்: 149

ஆண்கள் - 541
பெண்கள் - 499
மொத்தம் - 1040

பாகம் எண்: 150

ஆண்கள் - 413
பெண்கள் - 464
மொத்தம் - 877

பாகம் எண்: 151

ஆண்கள் - 513
பெண்கள் - 517
மொத்தம் - 1030

பாகம் எண்: 152

ஆண்கள் - 407
பெண்கள் - 454
மொத்தம் - 861

வார்டு வாரியாக மொத்தம்

ஆண்கள்  -1874
 பெண்கள் - 1934

மொத்தம் - 3808

கோபாலப்பட்டிணத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 1874 ஆண் வாக்காளர்களும், 1934 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 3808 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2021 இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 3767  வாக்காளர்கள் இடம் பெற்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் 58.84% வாக்குகள் பதிவாகியது.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2019 உள்ளாட்சி தேர்தலில் 56.74% வாக்குகள் பதிவாகியது.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 59.06% பதிவாகியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments