திருவாரூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி இடையே அடுத்த மாதம் முதல் கூடுதல் ரெயில் இயக்கம்கேட் கீப்பர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட திருவாரூர், காரைக்குடி இடையேயான வழித்தடத்தில் அடுத்த மாதம் முதல் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சி: திருவாரூர்&காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் பற்றாக்குறையால் ரெயில்கள் இயக்கம் குறைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் ஒரே ஒரு சிறப்பு ரெயில் மட்டுமே மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொபைல் கேட் கீப்பர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர். இதையடுத்து ரெயில்வே வாரியம் கடந்த அக்டோபரில் 72 கேட்கீப்பர் காலிப்பணியிடங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் நிரப்ப அனுமதி அளித்தது.  இந்த தேர்வு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 
இது பற்றி திருச்சி ரெயில்வே டிவிஷனல் மேனேஜர் மணீஸ் அகர்வால் கூறும்போது, கேட் கீப்பர் வேலைக்காக முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து 500&க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த பட்டியல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் வந்ததும் தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அடுத்த மாதம் அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள். 

இதையடுத்து அடுத்த மாதம் கடைசியில் வாரம் 3 முறை இயக்கப்படும் தாம்பரம்&செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்,  இருவாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்&வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்&காரைக்குடி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 3 ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியத்தின் அனுமதி கோர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments