பல்லவன் (காரைக்குடி) எக்ஸ்பிரஸ் நாளை பிப்ரவரி 02 முதல் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


காரைக்குடி- சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் நாளை முதல் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் யார்டில் நடந்த பாதை அமைக்கும் பணி, மின்சார பணிகள் காரணமாக பல்லவன் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட்டன.

இந்த ரெயில்கள் நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
காரைக்குடி- எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் நாளை முதல் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். இதே போல எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் சூப்பர் பாஸ்ட் ரெயிலும் (12635) நாளை முதல் வழக்கமான நேரத்தில் எழும்பூரில் இருந்து புறப்படும்.

ரெயில் எண் 22403 புதுச்சேரி- டெல்லி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாளை முதல் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும். இதுவரையில் இயக்கப்பட்டு வந்த செங்கல்பட்டு- அரக்கோணம்- பெரம்பூர்- திருவொற்றியூர் பாதை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments