10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு: அட்டவணை வெளியீடு
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு: அட்டவணை வெளியீடு

சென்னை: கரோனா மூன்றாம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான தேதியையும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தன.

ஒமைக்ரான் பெருந்தொற்றுக் காரணமாக இன்று (31.01.2022) வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதின் காரணமாக அத்தேர்வுகள் தள்ளிவைக்கப்ப்பட்டன. தற்போது திருப்புதல் தேர்வுகள் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது." என்று தெரிவித்து அட்டவணை வெளியிட்டுள்ளது.

அட்வ்ட்டவணையில், 10-ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.ஆ4 ம் தேதி வரையும்,

12- ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.5 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments