குளவாய்பட்டியில் நெல்மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்

குளவாய்பட்டியில் நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் 

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளவாய்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை பனி, மழை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து வைப்பதற்கு சிரமப்பட்டு வந்தனர். 

இதனை தொடர்ந்து திடீரென்று புதிதாக அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொண்டு செல்ல முடியாது என்று கூறி, குளவாய்பட்டியில், நேற்று புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் விவசாயிகள் நெல் மணிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை 

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா, புதுக்கோட்டை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், ஆலங்குடி தாசில்தார் செல்வநாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து  சென்றனர். 

இருந்தபோதிலும் விவசாயிகள் புதிய நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மணிகளை கொண்டு செல்வதற்கு மறுத்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் பழைய இடத்தில் இருந்த நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments