கோபாலப்பட்டிணத்தில் 2015 பிப்ரவரில் நடைபெற்ற இஜ்திமா! கடந்த கால வரலாற்றை பற்றி இன்றைய இளைய தலைமுறைகளுக்கு GPM மீடியா நினைவுப்படுத்துகிறது
கோபாலப்பட்டிணத்தில் 2015ல்    நடைபெற்ற இஜ்திமா! கடந்த கால வரலாற்றை பற்றி இன்றைய இளைய தலைமுறைகளுக்கு GPM மீடியா நினைவுப்படுத்துகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும்  மாவட்ட இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டு  பிப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகை முதல் பிப்ரவரி 04 புதன்கிழமை இஷா வரை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த இஜ்திமாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கோபாலப்பட்டிணம் ஹல்காவில் இருந்து  தன்னார்வலர்கள் ஏரளாமோனார் கலந்து கொண்டனர்.

இந்த இஜ்திமாவில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர்.

இஜ்திமாவில் பங்கேற்ற மக்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக தண்ணீர் பைப்புகள் அமைக்கப்பட்டன. அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல் ஐவேளைத் தொழுகையும் மாநாட்டு திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இஜ்திமா ஏற்பாட்டாளர்கள் மூலம் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இஜ்திமாவை முன்னிட்டு கோபாலப்பட்டிணத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈத்கா மைதானம் உருவான வரலாறு (தோற்றம் 2015)
கோபாலப்பட்டிணம் கிரீன் பார்க் மைதானம் கடந்த 2015  முன்பு வரை கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மட்டுமே இருந்து வந்தது. இங்கு உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த மைதானத்தில் தொடர் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்தனர். அதன் பிறகு இஸ்திமா ஏற்பாடு வேலை ஆரம்பமானது முதல் மைதானமே வேற தோற்றத்தில் காணப்பட்டது.அதன் பிறகு 2015 முதல் பெருநாள் தொழுகை மற்றும் பெண்களுக்கான பெருநாள் தோப்பு ஆகியவை எல்லாம் இந்த மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இங்கு  நடைபெறுவதற்கு முன்பு பெண்களுக்கான பெருநாள் தோப்பு அரண்மனை தோப்பிலும், பெருநாள் தொழுகை அனைத்து பள்ளிவாசலிலும் நடைபெற்ற வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் தவறுகள் எதுவும் இருப்பின் எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் அதை திருத்தி கொள்கின்றோம்.

இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்வதில் GPM மீடியா பெருமை கொள்கிறது.

இது போன்று நமதூரின் முக்கிய வரலாற்று பதிவுகள் இருந்தால் அதைப்பற்றி தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.

குறிப்பு : இஸ்திமா புகைப்படங்கள் உங்களிடம் வேற எதுவும் இருந்தால் எங்கள் GPM மீடியா அட்மீன்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு இஸ்திமா புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

இஸ்திமா  புகைப்படங்கள் தொகுப்பு:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments