ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவேடு பள்ளியில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுதல், மாணவர்களும் ஆசிரியர்களும் முக கவசம் அணிதல், கழிவறை தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தையும், முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்து கூறினார். எதிர்வரும் திருப்புதல் தேர்வு, ஹைடெக் கணினி ஆய்வகத்தின் வழியாக நடைபெறும் வினாடி-வினா தேர்வு ஆகியவற்றை சிறப்புடன் எழுதிட மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது, பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் உள்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments