புதுகை நகருக்குள் அதிகரிக்கும் நாய்களின் அட்டகாசம்





புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கூட்டமாகச் சுற்றித் திரியும் நாய்கள்.

புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள்பட்ட பல பகுதிகளிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிவதும், இரவு- பகல் பாராது குலைத்துக் கொண்டு, பொதுமக்களைப் பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றன.

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வீதிகளிலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் ஒய்யார நடை போட்டுத் திரிகின்றன. அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் சாலைகளிலேயே படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன.

சாலையில் நடந்து செல்வோரையும், காரிலும், இரு சக்கர வாகனங்களிலும் செல்வோரைத் துரத்திக் கடிப்பதும் தொடா்கிறது. நாய்கள் விரட்டுவதால் அஞ்சி, வேகமாகச் சென்று விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளும் உண்டு.

நகரின் பலபகுதிகளிலும் பெருகியுள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றாமல், கண்ட இடங்களில் கொட்டுவது நாய்களின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்வதாகவும், அதனாலேயே தெருநாய்களின் பெருக்கமும், வெறித்தனமும் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, புதுக்கோட்டை நகராட்சி நிா்வாகம் இறைச்சிக் கழிவு உள்ளிட்ட கழிவுகளை முறைப்படுத்துவதன் மூலம் தெருநாய்களின் உணவுச் சங்கிலியை அறுக்கவும், நாய்களைப் பிடித்துச் சென்று இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு புகரப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டுவிடவும் திட்டமிட வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும். மேலும், நாய்களின் மீது கருணை கொண்டு, செல்லப் பிராணியாக வளா்க்க விரும்புவோா், அவா்களின் வீட்டுக்குள், வீட்டு வளாகத்துக்குள் வளா்ப்பதையும், முறைப்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments