கீரமங்கலம் அருகே பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி தேர்தலையொட்டி நேற்று அதிகாலை பறக்கும் படை அதிகாரியான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் திருவள்ளுவர் மன்றம் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் சென்ற அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது ஆரிப் (வயது 30) என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்தனர். தான் பட்டுக்கோட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்த பணம் என்று கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பணத்தை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பணத்திற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலையில் உரியவரிடம் பணம் கொடுக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments