தமிழகத்தில் அஞ்சல் நிலையங்கள் கணிப்பொறிகளுடன் நவீனப்படுத்தப்படுமா? மக்களவையில் சி.என்.அண்ணாதுரை கேள்வி!

தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்கள் கணிப்பொறி வசதிகளுடன் நவீனப்படுத்தப்படுவது எப்போது என்று மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் தனி நபர் மசோதா மீது நடை பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு சி.என். அண்ணாதுரை பேசியதாவது :

 தமிழ்நாட்டில் உள்ள பல அஞ்சல் நிலையங்கள் இன்னமும் பழங்கால கட்டிடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. சில இடங்களில் அவை இருக்கும் இடங்களே பொது மக்களுக்குத் தெரிவதில்லை. அப்படியே  தெரிந்தாலும் அங்கு செல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. அங்கே நவீன கருவிகள் இல்லாத காரணத்தால்  செல்லுகின்ற ஒரு சிலருக்கும் வீண் தாமதம் ஏற்படுகிறது. 

ஆனால், ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக் கருத்து என்ன வெனில், அஞ்சல் அலு வலகங்கள், நவீனப்படுத்தப்பட்டு கணிப்பொறி களெல்லாம் அங்கு
பயன்பட்டில் இருந்து வருகிறது என்பதுதான்.

நான் தொலைத் தொடர்பு அமைச்சரை கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். தமிழகத்தில் எத்தனை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. அவைக ளில் எத்தனை கணிப் பொறி வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளன? 

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எத்தனை அஞ்சல் நிலை யங்கள் நவீனப்படுத்தப் பட்டுள்ளன? 

நவீனப்படுத்தப்பட வில்லை என்றால் அவைகள் எல்லாம் எப்போது கணிப்பொறி வசதிகள் செய்யப்பட்டு நவீனப் படுத்தப்படும்? என்கிற தகவலைத் தெரிவிக்க வேண்டுகிறேன்

இதே போன்று நமது அருகில் உள்ள மீமிசல் அஞ்சல் நிலையத்தில் கனிப்பொறி நவீனபடுத்தவில்லை என்றும் அதார் புதுப்பித்தல் மற்றும் இ-சேவை பனிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் பொது மக்கள் கூறுகின்றனர் 

மேலும் பதிவு அஞ்சல் அனுப்பும் போது ஒப்புகை படிவும் ஏதும் இல்லை என்று அஞ்சல் துறை அலுவலர் கூறுகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments