அறந்தாங்கியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர் கூட்டம் அறந்தாங்கி மர்க்கஸில் மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமையில்   நடைபெற்றது.

 மாவட்ட செயலாளர் முகம்மது பாரூக் மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் மற்றும் மாவட்ட துனை செயலாளர்கள் சேக்அப்துல்லா, அப்துல் முஹ்சின்,ரபீக் ராஜா,பீர் முகம்மது, மருத்துவஅணி செயலாளர் முகம்மது அலி, மாணவரணி முஹம்மது சபீர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  மாநில செயலாளர்கள் தாவூத் கைசர், முகம்மது ஒலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.                            




* இஸ்லாமிய பித்அத் ஒழிப்பு மாநாடு 2023 பிப்ரவரி 5 ம் தேதி நடத்துவது. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

* இஸ்லாமிய திருமணத்தினை நடத்தி வைக்கும் இமாம் அல்லது காஜி அளிக்கும் சான்றே போதுமானது. எனவே சட்டப்படி மக்களை அலைகழிக்காமல் பதிவுத்துறையினர் பதிவுசெய்யவேண்டும். 

* சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காக்கவேண்டும். 

* மணமேல்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கவேண்டும். 

* புதுக்கோட்டை மாவட்டத்தில் தெருநாய்கள்,வெறிநாய்களை கட்டுபடுத்த வேண்டும். 

* அறந்தாங்கி குட்டை குளத்தை சுற்றி பாதுகாப்பு வளையத்தை நகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும். 

* கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ள கர்நாடகா பாசிச அரசை கண்டிக்கிறோம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக மாவட்ட துணை தலைவர் முகம்மது மீரான் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments