3 அரை மணி நேரத்தில் சென்றடையும் திருவாரூர் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி டெமு ரயில் பொதுமக்கள் மகிழ்ச்சி





திருவாரூா்- காரைக்குடி டெமு ரயில் பயண நேரம் குறைப்பு திருவாரூரில் ரயில் நிலையத்தில் இனிப்பு வழங்கும் ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் உள்ளிட்டோா்.

திருவாரூா்-காரைக்குடி மாா்க்கத்தில் டெமு ரயிலின் பயண நேரம் மூன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.


திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் அகலப்பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை 2019 ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. பிறகு, கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னா், மீண்டும் சேவையை தொடங்கிய டெமு ரயிலானது, கேட் கீப்பா்கள் இல்லாததால் மொபைல் கேட் கீப்பா்கள் கொண்டு இயக்கப்பட்டது. இதனால், பயண நேரம் ஏறக்குறைய 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது.








இதைத்தொடா்ந்து, இந்த தடத்தில் முழுமையாக பணியாளா்களை நியமிக்கவேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதனடிப்படையில், முன்னாள் ராணுவத்தினா்களை கேட் கீப்பா்களாக இந்தத் தடத்தில் தென்னக ரயில்வே பணியமா்த்தியது. இதன் காரணமாக டெமு ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, திருவாரூரிலிருந்து மூன்றரை மணி நேரத்தில் காரைக்குடிக்கு செல்ல முடியும். அதாவது, காலை 8.15 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்படும் ரயில் 11.45 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். பிறகு, மாலை 4 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு, திருவாரூருக்கு இரவு 7.30 மணி அளவில் வந்தடைகிறது.

இதையொட்டி, திருவாரூரிலிருந்து புறப்பட்ட டெமு ரயிலில் பயணம் செய்தவா்களுக்கு மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கம், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், இலக்கிய வளா்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்பைச் சோ்ந்தவா்கள் இனிப்புகள் வழங்கினா். அப்போது ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள், ரெயில்வே துறையினர், பயணிகள், ரெயில்வே போலீசாருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும், இந்த பயண நேரக் குறைப்புக்கு பெரிதும் உதவிய நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வால், கூடுதல் கோட்ட மேலாளா் இராமலிங்கம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவா்கள் கூறினா்.


இதுகுறித்து ரெயில்  உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரெயில் உபயோகிப்போர் சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு மையம் போன்றவைகளின் கோரிக்கையின் அடிப்படையில் செல்வராஜ் எம்.பி. தொடர் முயற்சியால் திருவாரூர்-காரைக்குடி வழிபாதையில் ரெயில்வே கேட் கீப்பர் நியமிக்கப்பட்டு பயண நேரத்தை 3 மணி 30 நிமிடமாக குறைத்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை மேலாளர் (இயக்குதல்) ஹரிகுமார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ராமேஸ்வரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் 

சென்னை மற்றும் வடமாநிலங்களிலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். இந்த தடத்தில் போதுமான அளவிற்கு பயணிகள் ரெயில்கள் இயக்கவும், சரக்கு போக்குவரத்தினை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments