கோட்டைப்பட்டினம் : வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மூதாட்டி மனு




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா மரியம் (வயது 85). இவரது கணவர் சாகுல் ஹமீது ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் தனியாக அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆயிஷா மரியம், மகள் பராமரிப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக ஆயிஷா மரியம் தனது மகளுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்தநேரத்தில் அவர் வசித்து வந்த வீட்டில் மகனும், மருமகளும் அத்துமீறி நுழைந்து அந்த வீட்டை அபகரித்ததாக கூறப்படுகிறது. தனது வீட்டை அபகரித்த மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுப்பதற்காக ஆயிஷா மரியம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு தனது உறவினர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் வந்தார்.


 தேர்தல் நடத்தை விதிமுறைகளால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால் மனுக்கள் அளிக்கும் பெட்டி தனியாக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் அவர் மனுவை அளித்த போது அந்த நேரத்தில் கலெக்டர் கவிதாராமு வந்தார். அவர் மூதாட்டி ஆயிஷா மரியத்திடம் மனு குறித்து கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments