புதுக்கோட்டை மாவட்டத்தில் : 187 பதவியிடங்களுக்கு 902 போ் போட்டி




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலின்படி, 187 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு மொத்தம் 902 போ் போட்டியிடுகின்றனா். இருவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிக்கும், 8 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 189 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இப்பதவியிடங்களுக்கு மொத்தம் 1,114 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 19 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை 191 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, 187 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பெட்டி----

உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக மொத்த வாா்டுகள், மொத்த மனுக்கள், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றித் தோ்வு, இறுதி வேட்பாளா்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் விவரம்

அறந்தாங்கி நகராட்சி- 27, 148, 3, 17, 0, 128

புதுக்கோட்டை நகராட்சி- 42, 334, 5, 47, 0, 282

ஆலங்குடி பேரூராட்சி- 15, 76, 1, 16, 0, 59

அன்னவாசல் பேரூராட்சி- 15, 76, 2, 7, 0, 67

அரிமளம் பேரூராட்சி- 15, 78, 0, 15, 0, 63

இலுப்பூா் பேரூராட்சி- 15, 97, 3, 33, 1, 60

கறம்பக்குடி பேரூராட்சி- 15, 82, 0, 9, 0, 73

கீரமங்கலம் பேரூராட்சி- 15, 68, 0, 20, 1, 47

கீரனூா் பேரூராட்சி- 15, 73, 4, 10, 0, 59

பொன்னமராவதி பேரூராட்சி- 15, 82, 1, 17, 0, 64

போட்டியின்றித் தோ்வு: இலுப்பூா் பேரூராட்சியில் 5ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த செந்தில்ராஜா போட்டியின்றி தோ்வு பெற்றாா்.

கீரமங்கலம் பேரூராட்சியில் 4ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த சா்மிளாபானு வெற்றி பெற்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments