ஆவுடையார்கோவில் - மீமிசல் சாலையில் டிராக்டரில் அடிபட்டு பெண் பலி
ஆவுடையார்கோவில் - மீமிசல் சாலையில்  டிராக்டரில் அடிபட்டு பெண் பலி

ஆவுடையார்கோவில் அருகே உள்ள அமரடக்கியை சேர்ந்தவர் ஆரோக்கி யசாமி. இவரது மனைவி பாப்பா (வயது 50).  சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், ஆவுடையார்கோவில்-மீமிசல் சாலையில் காசியார்மடம் அருகே வந்த டிராக்டரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments