தொண்டி அருகே வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் சிக்கியது.
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பறக்கும்படை அலுவலர் கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம், ஏட்டு செல்லத்துரை ஆகியோர் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமானேந்தல் கிராமத்தில் மதுரை- தொண்டி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற முகில்தகம் கிராமத்தை சேர்ந்த துரைச்சாமி என்பவர் மகன் முத்துக்குமார் என்பவரிடம் சோதனை நடத்தியதில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200  இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொண்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments