புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்


தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு மற்றும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடந்து முடிவடைந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று 18 மாணவ-மாணவிகள் வருகை தந்திருந்தனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். கலந்தாய்வு முழுமையாக முடிவடைந்த பின் படிப்படியாக மற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு வருவார்கள் என மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments