கோபாலப்பட்டிணம் கடற்கரையில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை.!!




கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரையில் சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்கள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.  தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரியும் நிலையில் காட்சியளிக்கிறது.




இது எந்த நேரத்திலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு கடற்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் இது போன்று கோபாலப்பட்டிணத்தில் பல மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments