தேர்தல் புறக்கணிப்பு அறந்தாங்கி நகர இரும்பு அடிசரக்கு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
அறந்தாங்கி நகர இரும்பு அடிசரக்கு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீற்குலைக்கும் வகையில் காமராஜர் சிலை எதிரில் நடந்துவரும் பிளாட்பார கடையை அப்புறப்படுத்தாதை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடத்தப்படும் என அச்சங்கம் அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு  இச்சங்கம் கொடுத்துள்ள மனுவில்  

எங்கள் இரும்பு அடிசரக்கு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த தொழில் ஸ்தாபன கடைகள் பல வருடங்களாக அரசு விதிமுறைகளின்படி இயங்கி வருகின்றது. ஆனால் கடந்த ஒரு வருடமாக வெளியூர் வாரச் சந்தைகளில் கடை நடத்தி வரும் நபர் ஒருவர், அறந்தாங்கி காமராஜர் சிலை எதிரில் எங்களுடைய தொழில் ஸ்தாபன கடைகளில் வியாபாரம் செய்யும் பொருட்களை நடைபாதை தளத்தில் கடையை வைத்து தரமற்ற பொருட்களையும், விலை குறைவாகவும் கொடுத்து விற்று வருகிறார். இதனால் எங்கள் சங்கத்தை சேர்ந்த கடைகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதோடு அவர் விற்கும் தரமற்ற பொருட்களால் எங்கள் கடைகளுக்கும் பெயர் கெடுகிறது. அதனை அறிந்த எமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் முறையிட்டோம்.
அதனை தொடர்ந்து  இங்கே கடை போடக்கூடாது என்று கடந்த வருடத்திலேயே வர்த்தக சங்கம் மற்றும் காவல் துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் காலி செய்து அனுப்பிய பிறகும் தற்போதும் அதே இடத்தில் கடை நடத்தி வருகிறார். 

சங்க வியாபாரிகள் கடை வாடகை, நகராட்சி இடவரி, நகராட்சி தொழில் வரி, கடை ஊழியர்கள் சம்பளம் ஆகியவை அனைத்தும் செலுத்தியும் தற்போது உள்ள கொரோனா காலத்தில் மிகவும் கடினமான சூழலில் தொழில் நடத்தி வருகிறோம். எங்கள் சங்க வியாபாரிகள் வாழ்வாதாரத்தின் நலன்கருதி நடைபாதை தளத்தில் (பிளாட்பாரத்தில்) உள்ள கடையை அகற்றித் தருமாறு மிக்கத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை புகார் மனு கொடுத்தோம். ஆனாலும் 
தற்போதும் அவர் தொடர்ந்து கடை நடத்தி வருகிறார். எனவே எங்கள் சங்கத்தின் கடைகள் பாதிக்கும் நிலையில் பிளாட்பாரத்தில் நடத்தி வரும் கடையை அகற்றாததை கண்டித்து எதிர்வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  அறந்தாங்கி இரும்பு அடிசரக்கு வியாபாரிகள் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு செய்கிறோம் 

எங்கள் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்திற்கு ஆதரவு தருமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வர்த்தக சங்கம், இதர பட்டரையர்கள் சங்கம், ஜனநாயக அமைப்புகள்,  அனைத்து கட்சிகள் என அனைவரிடமும் கோரியுள்ளோம் என்வும் தெரிவித்துள்ளார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments