புதுக்கோட்டை: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற குடும்ப விழா
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கணவன் மனைவியிடையே பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக புகார் அளிக்கப்பட்டால், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்று கவுன்சிலிங் வழங்கப்பட்டு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு சென்று எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வாழும் தம்பதியினரை அழைத்து காவல் நிலையத்தில் குடும்ப விழா நடத்தப்படும்.

இந்நிலையில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய அனைத்து மகளிர் காவல்துறையினர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால் இலவச தொலைபேசி எண் 1098-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments