2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில், கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு வரும் 18 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும்படி, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments