கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளிப்பு




கோபாலப்பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்கள் வழங்கப்பட்டது

15-02-2022 அன்று நடந்த நாட்டாணி புரசக்குடி  ஊராட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது ,  கூட்டத்தை பார்வையிடுவதற்காக பல்வேறு, கோரிக்கைகளை முன் வைப்பதற்காகவும் ,நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் 
புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர். வேங்கை பழனி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செயலாளர் இளந்தமிழன் இப்ராஹிம் , சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டல துணைத்.தலைவர்  முகமது நூருல்லா ,சவுதி செந்தமிழ் பாசறை தாய்ப்  மண்டல பொறுப்பாளர் முகம்மது நியாஸ் ,சென்றிருந்தனர்



அப்பொழுது பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது ,கோரிக்கைகள் பின்வருமாறு .

1.சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தபட வேண்டும் 

2.கோபாலபட்டினம் மற்றும் நாட்டாணி புரசக்குடி உட்பட்ட ஊராட்சிகளின் சாலைகளை சரி செய்யபட வேண்டும் 

3.கோபாலபட்டினம் மற்றும் நாட்டாணி புரசக்குடி உட்பட்ட ஊராட்சிகளின் தெரு விளக்குகளை   சரி செய்யபட வேண்டும் 

4. கோபாலபட்டினம் விஐபி நகர் மழைக்காலங்களில் தொடர்ந்து நீர் வடியாமல் இருப்பதை சரி செய்யபட வேண்டும். 

5.கோபாலபட்டினம் அவுலியா நகர்  மழைக்காலங்களில் தொடர்ந்து நீர் வடியாமல் இருப்பதை சரி செய்யபட வேண்டும் 

6.ஊராட்சி கணக்கு வழக்குகள் வெளிப்படைத்தன்மை யாக இருக்க சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்.

7. இதுவரைக்கும் கணபதி பட்டினத்தில் எந்த ஒரு நலத்திட்ட முன் செய்யாமல் இருப்பதால் குறைந்தபட்சம் அந்த ஊர் மக்களின் தேவையை அறிந்து தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் .

நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் R.சீதாலட்சுமி M.Sc.,B.Ed., அவர்கள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் ,ஒழுங்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

இப்படிக்கு .
ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் .
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி .
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. அது யாரு இழந்தமிழன் இப்றாகிம்???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.