புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகள் 2 இடங்களில் எண்ணப்படுகின்றன
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி ஆகும். இதற்காக புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அறந்தாங்கியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகின்றன.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதேபோல அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறந்தாங்கி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும்.

27 மேஜைகள்

புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 120 வாக்குச்சாவடிகள் ஆகும். இதில் வாக்கு எண்ணிக்கைக்காக 10 மேஜைகள் அமைக்கப்பட்டு 12 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும். இதேபோல அறந்தாங்கி நகராட்சிக்கு 39 வாக்குச்சாவடிகளுக்கு 9 மேஜைகள் போடப்பட்டு 5 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.

இதேபோல பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண தலா ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட உள்ளது. கீரமங்கலம், இலுப்பூர் பேரூராட்சிகளுக்கு தலா 14 சுற்றுகளும், மற்ற பேரூராட்சிகளுக்கு தலா 15 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 135 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக 27 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments