உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் ரியாஸ் கானை மீட்க பெற்றோர்கள் ,உறவினர்கள் , ஊர் மக்கள் கோரிக்கை




உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் ரியாஸ் கானை மீட்க பெற்றோர்கள் ,உறவினர்கள் , ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது போன்று தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த ஜகுபர் சாதித் இவருடைய மகன் ரியாஸ் கான் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோரத் நகரில் தங்கி அங்குள்ள ஒரு உஷ்கோரத் நேஷனல் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ரஷியா போர் தொடுத்து உள்ளதால்  கீவ் கார்கீவ் போன்ற சில இடங்களில் சுரங்கப்பாதையில்  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கி உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ரியாஸ் கான் தற்போது உக்ரைனில் உள்ள பிரவசலவ்னா நபரிஸ்னா 8 , உஷ்கோரத் இடத்தில் தங்கி உள்ளார். (+380 635630714 riyashkan68@gmail.com)

எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ,உறவினர்கள் , ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ரியாஸ் கான் "GPM மீடியா"விற்கு அனுப்பிய பிரத்தியேக வீடியோ மீட்க கோரி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை எப்போது இந்தியா திரும்புவோம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்

Pravoslavna Embarkment 8, uzhhorod (88000), Ukraine

வீடியோ யூடியூப்


வீடியோ முகநூல்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments