அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தென்னக இரயில்கள் அனைத்துக்கும் புக்கிங் ஆபிஸ் :மஜக கோரிக்கை
அறந்தாங்கி,பிப்.26:அறந்தாங்கி இரயில் நிலையத்தில்  தென்னக இரயில்கள் அனைத்துக்கும் புக்கிங் ஆபிஸ் தனி கவுன்டரில் அமைத்து தரவேண்டும் என மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி திருச்சி கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

காரைக்குடி திருவாரூர் விரைவு அகல இரயில் பாதையை  ஆய்வு செய்ய தனி இரயிலில் அறந்தாங்கி வருகை தந்த திருச்சி கோட்ட மேலாளரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அறந்தாங்கி இரயில் நிலையம் குறித்த தேவைகளை கோரிக்கை மனு கொடுத்தார். அதில் 

அறந்தாங்கி மார்க்கமாக காரைக்குடி திருவாரூர் இரயில் பாதை பல ஆண்டுகளுக்கு பின் அகல இரயில் பாதையாக மாற்றி விரைவு இரயிலயும் இயக்கி தந்த தென்னக இரயில்வே மற்றும் திருச்சி கோட்ட இரயில் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு கீழ்க்கண்ட மூன்று தேவைகளை பொதுமக்கள் சார்பாக கோருகிறோம். தென்னக இரயில்கள் அனைத்திற்கும் புக்கிங் ஆபிஸ் அறந்தாங்கி இரயில் நிலையத்தில் தனி கவுன்டராக அமைத்து தரவேண்டும்.இத்தடத்தில் இயக்கப்படும் காரைக்குடி திருவாரூர் இரயில்களை மதுரை மற்றும் சென்னை வரை ஒரே டிக்கெடில் இணைப்பு இரயில்களாக இயக்கவேண்டும். அறந்தாங்கி பாரம்பரியம் மிக்க விவசாய மற்றும் வியாபார தளம் எனவே ஏற்கனவே அறந்தாங்கி இரயில் நிலையத்தில் இருந்த  குட்செட்டைவிட பெரிய குட்செட் விரைவில் அமைத்து முதல் ஒருவருடத்திற்கு 50%  மானியம் சர்வீஸ் செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments