காரைக்குடியிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில்‌ திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்






காரைக்குடியில் தொடங்கி திருவாரூர் வரையிலான ரயில்பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே கோட்ட மேலாளர் மணீஸ் அகர்வால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

காரைக்குடி - திருவாரூர் வரையிலான ரயில் பாதையிலுள்ள 70 இடங்களில் பகல் நேரத்தில் பணியாற்றும் வகையில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர கேட் கீப்பர்களாக  முன்னாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மயிலாடுதுறையில் சோழன் ரயிலை இணைக்கும் வகையில் காரைக்கு டியிலிருந்து மயிலாடுதுறை வரை ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் மதுரை வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது இரவுநேர கேட்கீப்பர்கள் நியமனத்திற்கு பிறகு காரைக்குடி யிலிருந்து சென்னைக்கும், எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி இடையே நடந்துவரும் ரயில்பாதை அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.  

இவ்வாறு அவர் கூறினார்

ஆய்வின்போது முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் மற்றும் அலுவலர்  உடனிருந்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments