காடவராயன்பட்டி கிராமத்தில் தென்னையில் ஊடுபயிராக கடலை சாகுபடி




காடவராயன்பட்டி கிராமத்தில் தென்னையில் ஊடுபயிராக கடலை சாகுபடி

 கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் காடவராயன்பட்டி கிராமத்தில் தென்னை சாகுபடியில் ஊடுபயிராக கடலை பயிர் செய்துள்ளனர்.
 தற்சமயம் கடலைக்கு களை வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலை பயிர் செய்துள்ள விவசாயி கூறுகையில், தென்னைக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சுவதால் தென்னையில் களை அண்டாமல் இருக்க சிறு டிராக்டரை கொண்டு நன்கு உழவு செய்து அதில் ஊடுபயிராக கடலை விதைத்து உள்ளதாகவும், இவ்வாறு ஊடுபயிர் விவசாயம் செய்தால் தென்னையில் களை மண்டுவது வெகுவாக குறையும் என தெரிவித்தார். மேலும் இவர் கூறுகையில்,
நமது பாரம்பரிய விவசாய முறை என்பது நரி ஓட நாற்றும், வண்டி ஓட வாழையும் தேரோட தென்னையும் நட்டால் நல்லதொரு மகசூல் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில்,
அணில் தாவாத ஆயிரம் தென்னைமரம் இருந்தால் அவன் அரசனுக்கு சமமானவன் என வழக்கு மொழி உள்ளதாகவும் தென்னை ஒரு லாபகரமான விவசாயம் எனவும் இதில் ஊடுபயிராக சிறு தானியங்களை எதுவானாலும் பயிர் செய்யலாம் என தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments