புதுக்கோட்டை மாவட்டம் :தனிப்படை போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. பாராட்டு


தனிப்படை போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்பட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்கவும், திருட்டு வழக்குகளில் காணாமல் போன நகையை மீட்பதற்காகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
 இந்த தனிப்படையினர் திருட்டு போன 700 பவுன் நகைகள் மீட்பு, புகையிலை பொருட்கள் பறிமுதல், கஞ்சா விற்றவர்களை கைது செய்தல், திருட்டு போன ஆடுகளை மீட்டும் சிறப்பாக செயல்பட்டனர். இதில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பூர்விகா, காமராஜ், பாலமுருகன், பிரபாகரன், முருகையன் மற்றும் 23 போலீசாரை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். இதனை புதுக்கோட்டை போலீஸ் அதிகாரிகளிடம் தனிப்படையினர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments