உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உக்ரைனில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 5 ஆயிரம் மாணவர்களை மீட்டு வர தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனின் வான்வழிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க இயலவில்லை.
மாற்றுவழியாக உக்ரைனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்துவந்து பின்னர் கத்தாரில் இருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணி வரை தமிழக மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட, மாநில அளவிலும், டெல்லியிலும் தொடர்பு அலுவலர்களை நியமித்துள்ளது தமிழக அரசு.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினருக்காக ஹெல்ப்லைன்களை அறிவித்தது தமிழக அரசு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரஷ்ய ராணுவம் (24.2.2022) அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) , புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் மற்றும் உள்ளுறை ஆணையர் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் விபரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு அலுவலர்களின் எண்கள்
> மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070
> ஜெசிந்தா லாசரஸ், இஆப., ஆணையர்,
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு
ஆணையரகம் - 9445869848, 9600023645, 9940256444, 044-28515288
> உக்ரைன் அவசர உதவி மையம், தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுடெல்லி. வாட்ஸ்அப் எண் 9289516716, மின்னஞ்சல் – ukrainetamils@gmail.com
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.