கீரனூர் பேரூராட்சி கண்ணோட்டம்

    
கீரனூர் பேரூராட்சி கண்ணோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டது கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சி. 16.497 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு குறிப்பிடத்தக்க எந்த தொழிலும் இல்லை. கீரனூரை சுற்றி குக்கிராமங்கள் இருப்பதால் வியாபார பகுதியாக உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 11 ஆயிரத்து 667 மக்கள் உள்ளனர். இதில் ஆண் 5829 பேரும், பெண் 5838 பேரும் உள்ளனர்.

15 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 4,591 பேரும், பெண் வாக்காளர்கள் 4,847 பேரும் என மொத்தம் வாக்காளர்கள் 9,438 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். 
தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி 
 கீரனூர் பேரூராட்சி தலைவராக உ.சி.மணிராசன் (தி.மு.க.) 2 முறை இருந்துள்ளார். கே.வி.கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), சுபிதா பேகம் (காங்கிரஸ்), அ.மரியபுஷ்பம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கே.ரவிக்குமார் (தி.மு.க.), இரா.பவுல்ராஜ் (காங்கிரஸ்) ஆகியோர் பதவி வகித்து உள்ளனர்.
தற்போது நடைபெறும் தேர்தலில் 15 வார்டுகளில் தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 வார்டிலும் போட்டியிடுகின்றன. மேலும் அ.தி.மு.க. 13, அ.ம.மு.க. 9, பா.ஜ.க.3, விஜய் மக்கள் இயக்கம் 1,  நாம் தமிழர் கட்சி 12 வார்டுகளில் போட்டியிடுகின்றன. கீரனூர் பேரூராட்சியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. 
அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் 
கீரனூரில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இரவுநேர டாக்டர்கள் இல்லை. எந்த அவசர சிகிச்சை செய்வதற்கும் உபகரணங்கள் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் பழுதாகி உள்ளது. எந்த அவசர சிகிச்சைக்கும் திருச்சி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வழியிலேயே பலர் இறந்து விடும் பரிதாபமான நிலை உள்ளது. எனவே கீரனூர் அரசு மருத்துவமனையை உயர்தரமாக உருவாக்க வேண்டும். காவிரி குடிநீர் வினியோகிக்க வேண்டும். கீரனூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments