புதுக்கோட்டை மாவட்டம் பாலின சமத்துவம் குறித்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாலின சமத்துவம் குறித்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் இன்று (08.03.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் பாலின சமத்துமவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரை வலம் வந்தனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியானது புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், அண்ணாசிலை வழியாக 2 கி.மீ. தூரம் சென்று மறுபடியும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடைந்தது. 

இந்த மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், சென்ட்ரல் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments