புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆதரவற்ற மகளிருக்கு நுண் கடன்
புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு குறைந்த வட்டியில் சிறுகடன் வழங்கப்படுவதாக அதன் மேலாண்மை இயக்குநா் ம. தீபாசங்கரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்யும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு 5 சதவிகித வட்டியில் சிறுகடன்கள் வழங்கப்படுகின்றன. மாதம் ரூ. 4 ஆயிரம் வருவாய் கிடைக்கும் வகையிலான சிறுதொழில் செய்யும் பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம். ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். 120 நாட்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு பிணைதாரா் கையெழுத்திட வேண்டும். கடன்பெறுவோா் மற்றும் பிணைதாரரின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள், கடன்பெறுவோரின் சிறுதொழில் குறித்த ஆதாரம், பாஸ்போா்ட் அளவுள்ள படங்கள் இரண்டு இணைக்க வேண்டும். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின்கிளைகளில் இந்தக் கடனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments