தனியார் மனநல காப்பகத்தில் மீட்கப்பட்டு சிகிச்சையில் பூரண குணமடைந்த திரு.சரவணன் என்பவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மனநல காப்பகத்தில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சரவணன் என்பவர் மனநல சிகிச்சையில் பூரண குணமடைந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எம்.எம்.அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் (26.02.2022) அன்று அவரது அண்ணன் திரு.கதிர்வேல் மற்றும் அவரது குடும்பத்தினருடன்;; அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 29.10.2021 அன்று, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கள ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகம் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் திரு.சரவணன் என்பவரும் ஒருவர். புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் அளிக்கபட்டதன் பயனாக குணமடைந்த சரவணன் தனது அண்ணனின் அலைபேசி எண்ணை தெரிவித்தார்.
இத்தகவலை வைத்து கடந்த 21.02.2022 அன்று, மாவட்ட நிருவாகத்தின் உதவியுடன் திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினர் கண்டறியப்பட்டனர். திரு.சரவணன் திருப்பூர் மாவட்டம் அங்கயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து 26.2.2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திரு.சரவணன் என்பவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, அவரது அண்ணன் திரு. கதிர்வேல் மற்றும் அவரது குடும்பத்தினருடன்;; அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக திரு.சரவணனை தேடி வந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு தங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டதற்கு, அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட நிருவாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மனநல மருத்துவர் திரு.ரெ.கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.