புதுக்கோட்டையை புறக்கணித்து செல்லும் 3 வடமாநில ரயில்கள்!






புதுக்கோட்டையை புறக்கணித்து செல்லும் 3 வடமாநில ரயில்கள்!

1. 22535/ராமேஸ்வரம்-பனாரஸ் வாராந்திர ரயில் 

கரோனா பரவலுக்கு முன்பு வரை இந்த ரயில் புதுக்கோட்டையில் நின்று சென்றுகொண்டிருந்தது. கரோனா பரவலுக்கு பின் இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கான புதுக்கோட்டை நிறுத்தம் நீக்கப்பட்டது..  தற்போது ஒரு மார்க்கத்தில் மட்டும் புதுக்கோட்டையில் நின்று செல்கிறது. அதாவது  பனாரஸ் க்கு செல்லும் ரயில் நிற்பதில்லை ஆனால் பனாரசிலிருந்து வரும் ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்கும். கடந்த 2010 இல் தொடங்கப்பட்ட இந்த ரயிலின் மூலம் புதுக்கோட்டை மாவட்ட ஆன்மீக பக்தர்கள் நேரடியாக "காசி" க்கு செல்ல இந்த ரயில் பெரிதும் உதவி வந்தது குறிப்பிடத்தக்கது.

2. 22613/14/ராமேஸ்வரம்-அயோத்தி-ராமேஸ்வரம் "ஷ்ரத்தா_சேது" வாராந்திர ரயில் 

இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 2017லிருந்தே புதுக்கோட்டையில் நின்று செல்வதில்லை. அயோத்தி ரயில் நிலையம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. தற்போது இங்கு தான் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

3. 20973/94/ராமேஸ்வரம்-அஜ்மீர்-ராமேஸ்வரம் "ஹம்சபார்" வாராந்திர ரயில் 

முழுவதும் AC பெட்டிகளுடன் இயங்கும், மற்றொரு நீண்டதூர ரயிலாகும். அஜ்மீர் ரயில் நிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஜெய்ப்பூர் வெறும் 02:30 மணிநேரம் மட்டுமே. 

இவ்வாறு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா  உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களை  இணைத்தும் செல்லும் மேற்கண்ட மூன்று ரயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகர ரயில் நிலையமான புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை என்பது வேதனை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments