மீமிசல்,கோட்டைபட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் கோரிக்கை.
மீமிசல்,கோட்டைபட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்  எனதமிழக அரசுக்கும், உள்ளாட்சி துறை அமைச்சருக்கும் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதிகளான மீமிசல்,கோட்டை பட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்.

மேற்கண்ட நான்கு ஊராட்சிகளும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த முழு தகுதி பெற்றிருந்தும் 5ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக வாக்களர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தும் இதுநாள் வரை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

மேற்கூறப்பட்ட ஊர்கள் மக்கள்தொகை அதிகளவில் இருக்கும் ஊராட்சிகளாக இருப்பதால் போதுமான அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி பெறாமல் இருக்கிறது. இதனால் மேற்கண்ட ஊராட்சியும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. 

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீமிசல்,கோட்டைபட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி தர வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.

இவன்:
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments