ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க இன்றே (மார்ச் 31) கடைசி நாள்






ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறி உள்ளது

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறி உள்ளது.




இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என கூறி உள்ளது.  

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் - பான் இணைப்பது எப்படி?




1. http://www.incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:



மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும். 

ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments