காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட'பல்லவன்' ரெயில் நேரம் மாற்றம்


காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட'பல்லவன்' ரெயில் நேரம் மாற்றம்   செய்யப்பட்டுள்ளது

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை தினந்தோறும் அதிகாலை 5.05 மணிக்கு பல்லவன் விரைவு ரெயில் (வண்டி எண்- 1206) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னையை சென்றடைந்தது.

இந்தநிலையில் தற்போது காரைக்குடியில் இருந்து திருச்சி வரையிலான ரெயில்வே வழித்தடம் மின் வழித்தடமாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் இயங்கி வருவதால் (நாளை) ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

 இதேபோல் மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து மாலை 3.45மணிக்கு புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். இந்த தகவலை தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த ரயில் காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். (கார்டு லைன்)

காரைக்குடி பல்லவன் அதிவேக அதிவிரைவு ரயிலும் , மதுரை வைகை அதிவேக அதிவிரைவு ரயிலும் ரேக் சேரிங் செய்கிறது ...

இரண்டு ரயில்களும் காலை நேரத்தில் சென்னை செல்கிறது, மறுமார்க்கமாக காரைக்குடி மற்றும் மதுரைக்கு இரவு வந்து சேருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments