புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே விழிப்புணர்வுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன




புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் திருமதி.பி.ஜே.ரேவதி அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 03.03.2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில், மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

முதல் கட்டமாக 13 வட்டாரங்களிலும் நடத்தப்பட்டதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேற்படி போட்டியில் குழந்தையின் முதல் ஆயிரம் நாட்கள், இரத்த சோகையை போக்கும் பாரம்பரிய உணவுகள், புதிதாக திருமணமானவர்களுக்கான சரிவிகித உணவுகள் போன்ற தலைப்புகளில் உணவுகளை தயார்செய்து காட்சிபடுத்தினார்கள்.

பாரம்பரிய முறைப்படி தயார் செய்யப்பட்ட உணவுகளை செயல்முறைகளை விளக்கிக் கூறுதல், உணவின் சுவை மற்றும் தரம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வோடு பரிமாறப்பட்டிருத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு குறித்த விளக்கப்படங்கள், குழுவினரின் எண்ணிக்கை மற்றும் கூட்டமைப்பின் பங்கேற்பு, கிராம ஊராட்சியை பிரதிபலிக்கும்படியாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தயார் செய்திருக்கும் பட்டியல் மற்றும் செயல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதியாவார்கள்.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று முதல் பரிசினை திருமயம் ஒன்றியம், கோனாபட்டு ஊராட்சி, தெருநாச்சியம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.2500 மும், இரண்டாம் பரிசினை அன்னவாசல் ஒன்றியம், கோனாபட்டு ஊராட்சி, ரோஜா மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.2000 மும், மூன்றாம் பரிசினை அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சி, காயக்காரி அம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.1500 ம் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசாக தலா இரண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.500 வீதம் வழங்கப்பட்டது. இப்பரிசுத் தொகைகளை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் திருமதி.பி.ஜே.ரேவதி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.சியாமாலா, குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் ஆர்.சுமதி, உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments