புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பார்சல் அனுப்ப புதிய வசதி




புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பார்சல் அனுப்ப புதிய வசதியாக புதிதாக பார்சல் பேக்கேஜிங் மையம் புதுக்கோட்டை தபால் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேக்கேஜிங் சென்டரில் உள்நாடு மற்றும் வெளிநாடு பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து வந்து பார்சல் பேக் செய்து அனுப்பலாம்.
இந்த அரிய சேவையை அனைத்து பார்சல் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் உதவி தபால் கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி தபால் கண்காணிப்பாளர் (வடக்கு) பாலசுப்பிரமணியன், தலைமை தபால் நிலைய அதிகாரி சத்தியமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments