கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நாட்களாக வோடபோன்ஐடியா (VI) நெட்வொர்க்கில் சிக்னல் கோளாறு... வாடிக்கையாளர் கடும் அவதி


கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நாட்களாக வோடபோன் ஐடியா ( VI) நெட்வொர்க்கில் சிக்னல் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வோடபோன் ஐடியா சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இரண்டு நாட்களாக  சிக்னல் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் வேறு எவருக்கும் கால் செய்யவோ, அழைப்புகளைப் பெறவோ இயலாத படி பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே கோபாலப்பட்டிணத்தில் சிக்னல் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் வந்து உள்ளதால் வாடிக்கையாளர் கடும் அவதிக்குள்ளாகினர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது நெட்வொர்க் சிக்னல் சீராக கிடைக்கிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments