விராலிமலை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்பனை; பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலை தாலுகா பொய்யாமணி சீத்தப்பட்டியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி (வயது 39), மணிமுத்து (37), பழனிச்சாமி (55), அஞ்சலிதேவி (32) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 4 செல்போன், ஒரு மடிக்கணினி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.3 ஆயிரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments