கந்தர்வகோட்டை-யில் முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் நூலகம் திறப்பு
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1995-1996-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு உரிய நூல்கள் வாங்கப்பட்டு இந்தப் பள்ளியில் புதிய நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் வளர்ச்சி குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். இதில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது பள்ளி நாட்களின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பள்ளிக்கு புதிய நூலகத்தை அமைத்து தந்த முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments