திருக்கோகர்ணம் பகுதியில் 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு மளிகைகடையில் தடை செய்யப்படட புகையிலை பொருட்கள் 8 கிலோ 550 கிராம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை வைத்திருந்த சண்முகம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments