புதுக்கோட்டை மாவட்டத்தில் 71000 சிறாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்





திருக்கோகா்ணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் திலகவதி செந்தில், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் அா்ஜூன்குமாா், கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். 12 முதல் 14 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி அனுமதிக்கப்படுள்ளதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 71 ஆயிரம் சிறாருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments