நுகா்வோா் விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற உலக நுகா்வோா் தின விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 90 பேருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் கவிதா ராமு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு ஆகிய போட்டிகள் நுகா்வோா் விழிப்புணா்வுக்காக நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கணேசன், அறந்தாங்கி தனி வட்டாட்சியா் கருப்பையா, மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் பிரவீன்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments