புதுக்கோட்டையில் பணம் கொடுக்காததால் வளா்ப்பு தாய் அடித்துக் கொலை
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் அருகே ராசாபட்டியைச் சோ்ந்தவா் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள்(46). இவா்களுக்கு குழந்தை இல்லாததால் செல்வராஜ்(29) என்பவரை வளா்த்து வந்துள்ளனா். 3 ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி இறந்துவிட்டாா். இந்நிலையில், செல்வராஜ் சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வாங்கிச் சென்ாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை செல்வராஜ் மீண்டும் பணம் கேட்டுள்ளாா். அதற்கு, வீரம்மாள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செல்வராஜ், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வீரம்மாளை உலக்கையால் அடித்ததில் அந்த இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான செல்வராஜைத் தேடி வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments