ராமநாதபுரம் அருகே கார் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி , ஏழு பேர் படுகாயம்
ராமநாதபுரம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

கீழக்கரையைச் சேர்ந்தவர் நவ்ஷாத். இவர் சவுதி அரேபியாவில் உள்ளார். அவரைப் பார்ப்பதற்காக கீழக்கரையிலிருந்து அவரது மனைவி சரீன், குழந்தைகள் ரெயான், மரியம்முப்ரா ஆகியோருடன் அவரது சகோதரர் அசாத் மற்றும் வேன் ஓட்டுநர் அமீன் ஆகியோர் மதுரை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனர்.


வேன் தேவேந்திரநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி புது தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்த கார் வேன் மீது நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த காளிதாஸ் உள்ளிட்ட 8 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இதில் தொழில் அதிபர் மனைவி சோனு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்திரக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments